Asianet News TamilAsianet News Tamil

வேலையின்றி வறுமையில் தத்தளித்த விவசாயி... ஒரே நொடியில் மாபெரும் கோடீஸ்வரராகி திடீர் திருப்பம்..!

அதிர்ஷ்டம் வந்தால் கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டும் கொட்டும் என்பது இந்த நவீன காலத்திலும் நடந்தேறி வருகிறது. 

Meet the telangana farmer who won 28 crores
Author
Telangana, First Published Aug 5, 2019, 11:24 AM IST

வேலையின்றி தவித்த விவசாயி ஒருவர் திடீரென 28 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி அதிர்ஷ்டசாலியாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்கலா. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் இப்போது ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயியான இவர், சமீபத்தில் துபாய்க்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு வேலை எதுவும் அமையாததால், விரக்தியில் மீண்டும் ஊருக்கு திரும்ப தயாராகிவிட்டார்.Meet the telangana farmer who won 28 crores 

ஊருக்கு செல்வதற்கு முன் துபாய் பிக் டிக்கெட் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்க வேண்டும் என எண்ணியுள்ளார். தனது மனைவிக்கு போன் செய்து டிக்கெட் வாங்க பணம் ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். நண்பர் உதவியுடன் பணத்தை மனைவியிடம் இருந்து பெற்று, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிவிட்டு ஊர் திரும்பியுள்ளார். Meet the telangana farmer who won 28 crores

அதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை அவருக்கு பரிசு விழுந்ததாக போன் வந்திருக்கிறது. அதுவும் பரிசுத்தொகை, 15 மில்லியன் திர்ஹாம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 கோடி. இதனை ரிக்கலாவால் முதலில் நம்பவே முடியவில்லை. திகைத்துப்போய் நின்றுள்ளார். 

Meet the telangana farmer who won 28 crores
இது குறித்து ரிக்கலா கூறுகையில், 'நான் முன்னதாக ஒருமுறை துபாயில் டிரைவராக பணியாற்றி இருக்கிறேன். அப்போது சீட்டு வாங்குவேன். என்னிடம் பணம் இல்லாததால், மனைவியிடம் கேட்டேன். நண்பர் ரவி மூலம் கொடுத்து அனுப்பினார். இதற்கு முழு காரணமும் என் மனைவிதான்' என மகிழ்ச்சியுடன் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios