காய்ச்சலுக்கு பயன்படுத்தும் இந்த மருந்துகள் தரமில்லாதது... மத்திய அரசு கொடுத்த ஷாக் நியூஸ்!!

நாடு முழுவதும் காய்ச்சல் மற்றும் இதய பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

medicines which used for fever found poor quality shock news given by the central government

நாடு முழுவதும் காய்ச்சல் மற்றும் இதய பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பின் மருத்துகள் மற்றும் மாத்திரைகளிம் விற்பனை அதிகரித்துள்ளது. அன்மையில் பாராசிட்டமால், டோலா 650 உள்ளிட்ட மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு நாளா ரெண்டு நாளா 22 வருஷமா குளிக்காமல் இருந்து வரும் நபர்.. மனைவி இறந்த போதும் குளிக்கல.!!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதே போன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஆயிரத்து 96 மருந்துகளை ஆய்வு செய்ததில் அதில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப் போக்கு, ஜீரண மண்டலா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: யோகம் இப்படி வரணும்! கடனால் வீட்டை விற்க முயன்றவருக்கு லாட்டரியில் ரூ.ஒரு கோடி பரிசு

அதுக்குறித்த தகவல்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த தரமற்ற மருந்துகள் அனைத்தும் இமாச்சளப் பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios