ஒரு நாளா ரெண்டு நாளா 22 வருஷமா குளிக்காமல் இருந்து வரும் நபர்.. மனைவி இறந்த போதும் குளிக்கல.!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காக 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ள சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காக 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ள சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அவர் கூறும் காரணங்கள் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது.
ஒரு மனிதன் அன்றாட கடமைகளில் ஒன்று குளிப்பது, குளியல் என்பது உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை சுத்தம் செய்யவும் செய்யப்படும் அத்தியாவசிய கடமையாகும். இதுமட்டுமின்றி குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது, அந்த அடிப்படையில் ஒரு சிலர் ஒரு நாளைக்கு இரண்டு முறைகூட குளிக்கின்றனர். சிலர் வாரத்திற்கு ஐந்து நாட்கள் குளிப்பர், சிலர் காலையில் குளித்தால், இன்னும் சிலர் மாலையில் குளிப்பர், ஒரு சிலருக்கு குளிர்ந்த நீரில் குளித்தால் பிடிக்கும், மற்றவர்கள் வெண்ணீரில் குளித்தால்தான் குளித்ததை போலவே உணர்வர்.
சிலர் சோப்பு, சேம்பு பொன்றவற்றை தவிர்த்து இயற்கை முறையில் சந்தனம், துளசி மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பர், இப்படி குளியல் என்பது பல வகைகளில் வித விதமாக நடக்கிறது, இது அந்த ந்த நபரை பொறுத்து அமைகிறது. ஆனால் இங்கு ஒரு நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக குளிக்காமல் இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
ஒருவர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குளிக்கவில்லை என்றாலும் கூட அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசக் கூடும், ஆனால் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த நபர் உடலில் இதுவரை எந்தவிதமான துர்நாற்றமோ அல்லது கெட்ட வாடையோ, அவருக்கு எந்தவித சரும பிரச்சனைகள் ஏற்பட வில்லை என்பதுதான்.
இதையும் படியுங்கள்: kerala lottery: யோகம் இப்படி வரணும்! கடனால் வீட்டை விற்க முயன்றவருக்கு லாட்டரியில் ரூ.ஒரு கோடி பரிசு
முழு விவரம் பின்வருமாறு பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம், மஞ்சா தொகுதி பைகுந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மதேவ் ராம் (62) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வேலையை இழந்தவர் ஆவார். இவர் தனது இளம் வயதில் சந்தித்த, பார்த்த சில பிரச்சினைகள் இவரை விரக்தியின் மன நிலைக்கு தள்ளியது, அதன் விளைவாக இவர் இனி குளிப்பது இல்லை என முடிவு செய்தார், அதை அவர் ஒரு சபதமாகவே எடுத்து கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: rahul: அரசரே! கேள்விக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
இந்நாள் வரையும் குளிப்பதற்கான எத்தனையோ சூழல்கள் ஏற்பட்டும் குளிப்பது இல்லை என்ற சபதத்தை இந்நாள் வரை அவர் காப்பாற்றி வருவதுதான் சாமர்த்தியம். 1987 காலகட்டங்களில் நிலத்திற்கான மோதல்கள், விலங்குகள் கொல்லப்படுவது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் அதிகரித்ததாகவும், அது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், அதுமுதல் இனிதாம் தாம் குளிக்க வேண்டாம் என முடிவு எடுத்ததாகவும், அதைத்தொடர்ந்து ஒரு குருவை சந்தித்து அவரிடம் 6 மாதங்கள் தங்கி அவரின் ஆசி பெற்றதாகவும், அன்று முதல் இன்று வரை தான் குளிக்காமல் இருந்து வருவதாகவும் தர்மதேவ் கூறியுள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு அவரது மனைவி மாயாதேவி இறந்தபோது கூட அவர் தான் எடுத்த சபதத்திற்காக குளிக்கவில்லை, அதை அடுத்து அவரது இரண்டு மகன்கள் இறந்த போது கூட உடலில் ஒரு சொட்டு தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டார் தர்மதேவ், அவரின் இந்த லட்சியத்திற்கு அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பது அதில் ஆச்சர்யம். இத்தனை ஆண்டுகள் குளிக்காமல் இருந்து வந்தும், அவருக்கு எந்தவிதமான நோய்களோ அல்லது சர்ம வியாதிகளோ ஏற்பட வில்லை என்பது தான் ஆச்சர்யம் அளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
2000ம் ஆண்டு தர்ம தேவ் கொல்கத்தாவில் உள்ள சணல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார், அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை கண்டு வேலையை ராஜினாமா செய்துள்ளார், ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் அவர் மீண்டும் அங்கே பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால் அவர் குளிக்காமல் வருகிறார் என்பது தெரிந்த தொழிற்சாலை நிர்வாகம், அவரை பணியிடை நீக்கம் செய்தது. அதன் பிறகும் அவர் குளிக்கவே வேண்டாம் என நிரந்தரமாக முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ராம பகவானை தனது லட்சிய தெய்வமாக வழிபட்டு வருவதாகவும் ராம தேவ் தெரிவித்துள்ளார்.