இந்திய பகுதிகளை உள்ளடக்கிய சீனாவின் நிலையான வரைபடம் 2023 தொடர்பாக அந்நாட்டுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினை அண்மைக்காலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்தியில் ஆளும் பாஜக மறுத்து வருகிறது. இருப்பினும், லடாக், அருணாச்சலப் பிரதேச மாநில எல்லைகளில் சீனாவின் அத்துமீறலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை அந்நாடு வெளியிட்டுள்ளது. அதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கும் தைவானையும், தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளையும் சீனா தனது பிரதேசமாக அறிவித்துள்ளது.

ஜி20 கூட்டம்: ஜோ பைடன், ஜி ஜின்பிங் தங்கும் சொகுசு ஹோட்டல்கள்!

கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு `தெற்கு திபெத்' என சீனா பெயர் மாற்றம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடத்தையும் சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், சீனாவின் நிலையான வரைபடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…

இந்த நிலையில், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய சீனாவின் நிலையான வரைபடம் 2023 தொடர்பாக அந்நாட்டுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சீனாவின் வரைபடம் குறித்து ஜனநாயக முறையில் அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையற்ற அவர்களின் (சீனா) கூற்றுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். சீனாவின் இந்த நடவடிக்கை எல்லை பிரச்சினைக்கான தீர்வுகளை மேலும் சிக்கலாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.