ஜி20 கூட்டம்: ஜோ பைடன், ஜி ஜின்பிங் தங்கும் சொகுசு ஹோட்டல்கள்!

ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன

Joe Biden Xi Jinping arriving delhi hotel rooms booked ahead of g20 meet smp

ஜி20 தலைமையை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு தலைப்புகளில் ஜி20 கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி, அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர், விருந்தினர்கள் என பலரும் கலந்து கொள்ள இந்தியா வரவுள்ளனர். அதனையொட்டி, உலகத் தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 31 ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள்
ஐடிசி மௌரியா, தாஜ் மான்சிங், தாஜ் பேலஸ், ஹோட்டல் ஓபராய், ஹோட்டல் லலித், தி லோதி, லீ மெரிடியன், ஹயாட் ரீஜென்சி, ஷங்ரி-லா, லீலா பேலஸ், ஹோட்டல் அசோகா, ஈரோஸ் ஹோட்டல், தி சூர்யா, ராடிசன் புளூ பிளாசா, ஜேடபிள்யூ மேரியட், ஷெரட்டன், தி லீலா ஆம்பியன்ஸ் மாநாடு, ஹோட்டல் புல்மேன், ரொசெட் ஹோட்டல் மற்றும் தி இம்பீரியல் ஆகிய 23 நட்சத்திர ஹோட்டல்கள் தலைநகர் டெல்லியில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், தி விவாண்டா (சூரஜ்குண்ட்), ஐடிசி கிராண்ட் (குருகிராம்), தாஜ் சிட்டி சென்டர் (குருகிராம்), ஹயாட் ரீஜென்சி (குருகிராம்), தி ஓபராய் (குருகிராம்), வெஸ்ட்இன் (குருகிராம்), கிரவுன் பிளாசா (கிரேட்டர் நொய்டா) ஆகிய 9 நட்சத்திர ஹோட்டல்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

யார் எங்கு தங்குகிறார்கள்?
ஐடிசி மவுரியா ஹோட்டலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கவுள்ளார். ஒவ்வொரு தளத்திலும் 'அமெரிக்கன் சீக்ரெட் சர்வீஸ்' கமாண்டோக்கள் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஜோ பைடன் 14ஆவது மாடியில் உள்ள சூட் அறையில் தங்கவுள்ளார். அந்த அறையை சென்றடைய சிறப்பு லிப்ட் பொருத்தப்படவுள்ளது. இந்த ஹோட்டலின் சுமார் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங் தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கவுள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஷாங்கிரிலா ஹோட்டலில் தங்கவுள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கிளாரிட்ஜஸ் ஹோட்டலில் தங்கவுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இம்பீரியல் ஹோட்டலில் தங்கவுள்ளார் என விவரமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LPG Gas Price: ரக்ஷாபந்தன், ஓணம் பண்டிகைக்கு மத்திய அரசின் பம்பர் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் துருக்கிய பிரதிநிதிகளும், மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் லீ மெரீடியன் ஹோட்டலிலும் தங்கவுள்ளனர். சீனா மற்றும் பிரேசில் நாட்டை  சேர்ந்த பிரதிநிதிகள் தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கவுள்ளார். மேலும் இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் இம்பீரியல் ஹோட்டலில் தங்கவுள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியின் பிரதிநிதிகள் ஷாங்க்ரி-லா ஹோட்டலிலும், ஹையாட் ரீஜென்சியில் இத்தாலிய மற்றும் சிங்கப்பூர் பிரதிநிதிகளும் தங்கவுள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சாணக்யபுரியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டனில் தங்கவுள்ளனர். ஓமன் பிரதிநிதிகள் லோதி ஹோட்டலிலும், பிரெஞ்சு பிரதிநிதிகள் கிளாரிட்ஜஸ் ஹோட்டலிலும், வங்கதேச பிரதிநிதிகள் குருகிராமில் உள்ள கிராண்ட் ஹயாட்டிலும் தங்கவுள்ளனர். கனடா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி லலித ஹோட்டலில் தங்கவுள்ளனர். கொரிய பிரதிநிதிகள் குருகிராமில் உள்ள ஓபராய் ஹோட்டலிலும், எகிப்திய பிரதிநிதிகள் சாகீத்தில் உள்ள ஐடிசி ஷெரட்டனிலும், சவுதி அரேபிய பிரதிநிதிகள் குருகிராமில் உள்ள லீலா ஹோட்டலிலும் தங்கவுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் தங்கவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள், தொடர்பு குழுக்கள், தலைவர்கள் வருகைக்கு முன்பே வந்து ஏற்பாடுகளை கவனிக்கும் குழுக்கள் ஏற்கனவே டெல்லி வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய துணை ராணுவப் படைகள், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மற்றும் டெல்லி போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களின் கமாண்டோக்களுக்கும் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios