இனி பர்கரில் தக்காளி இருக்காதாம்.. இது என்னபா McDonald'sக்கு வந்த சோதனை..! மாஸ் காட்டும் தக்காளி!
தங்களது மெனுவில் உள்ள உணவு பொருட்களில் தக்காளி இருக்காது என்று டெல்லியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ச்சியாக தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், அதை கடைகளில் இருந்து திருடிச்செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றது. இதனையடுத்து தக்காளியைப் பெறுவதில் ஏற்படும் சிக்கலால், தங்களது மெனுவில் உள்ள உணவு பொருட்களில் இனி தக்காளி இருக்காது என்று டெல்லியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தக்காளி அதிகம் வளரும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு, அதன் விநியோகச் சங்கிலியை சீர்குலைப்பதால் தான் தக்காளி விலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் McDonald's நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் "நாங்கள் சிறந்த முயற்சிகள் எடுத்தபோதிலும், தரம் வாய்ந்த போதுமான அளவு தக்காளியை எங்களால் பெற முடியவில்லை".
இதையும் படியுங்கள் : மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை - கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா திட்டவட்டம்!
"எனவே, தற்போதைக்கு, தக்காளி இல்லாத எங்கள் உணவுகளை உங்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருப்பினும் தக்காளி சார்ந்த பொருட்களை மீண்டும் கொண்டுவர நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்", என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மெக்டொனால்டு இந்தியாவின், வடக்கு மற்றும் கிழக்கு பகுதி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தக்காளி விலை உயர்வு காரணமாக மெனுவில் இருந்து அது நீக்கப்படவில்லை, எங்கள் சமையலில் பயன்படுத்தப்படும் தக்காளிகள் தரத்திற்கு ஏற்ற அளவில் தக்காளி கிடைக்காததால் தான் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.