MBBS பட்டம் பெற்ற சில மணிநேரங்களிலேயே கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம்.. என்ன காரணம் தெரியுமா?
MBBS பட்டம் பெற்ற சில மணிநேரங்களில் கல்லூரி மாணவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று டாக்டராவது என்பது மருத்துவ மாணவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, MBBS பட்டம் பெற்ற 21 வயது மருத்துவ மாணவரின் மகிழ்ச்சியான தருணம் அவரது குடும்பத்தினருக்கு சிறிது நேரத்திலேயே வேதனையாக மாறியது. ஆம். பெங்களூரு அருகே மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மருத்துவ மாணவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்.
பெங்களூருவில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள தும்கூரின் புறநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி (எஸ்எஸ்எம்சி) வளாகத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்தவர் ஆதித் பாலகிருஷ்ணன் என்பது அவர் கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தும்கூர் காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது, " பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பி உள்ளார். அவரது அறைக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் அருகே இரவு 11 மணியளவில் விஷப்பாம்பு கடித்துள்ளது. ஆனால் பாம்பு கடித்ததை அறியாத வீட்டிற்கு வந்தபோது, அவர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. " என்று தெரிவித்தார்
இறந்தவரின் உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் இருந்தபோதிலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஆதித்தின் ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது, இது பாம்புக்கடியை உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆதித்தின் மரணம் அவரின் குடும்ப உறுப்பினர்களியே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அவரின் தாய் மற்றும் உறவினர்கள் பெங்களூரு வந்திருந்தனர். ஆனால் ஆதித் பாம்பு கடித்து உயிரிழந்ததால் அவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஆதித்தின் தந்தை இத்தாலியில் இருப்பதாகவும் அவர் இறுதிச் சடங்குகளுக்காக இந்தியா வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின் இருக்கையில் பயணித்த பெண்.. அத்துமீறிய ரேபிடோ டிரைவர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்.!!
எஸ்எஸ்எம்சி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜிஎன் இதுகுறித்து பேசிய போது "ஆதித் ஒரு பாராட்டுக்குரிய மாணவர், அவரது துயர மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாதது துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக நாங்கள் இரங்கல் கூட்டத்தை நடத்தி அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.