மாயாவதியின் அரசியல் வாரிசு: யார் இந்த ஆகாஷ் ஆனந்த்?

மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார்

Mayawati Names Nephew Akash Anand as her Political Successor smp

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட முக்கியமான கூட்டத்தில் தனது அரசியல் வாரிசை மாயாவது அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலின் மாயாவதியின் பிரசாரத்தின் போது, முக்கிய முகமாக பார்க்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வாரிசு அரசியலை கடுமையாக விமர்சிக்கும் மாயாவதி, 2019ஆம் ஆண்டில் தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்தார். அவரது மகனும், தனது மருமகனுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி நியமித்தார்.

28 வயதான ஆகாஷ் ஆனந்த், கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் நுழைந்தார். மாயாவதி மற்றும் பிற பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் பல்வேறு புகைப்படங்களில் அவர் பரவலாக காணப்பட்டார் அதற்கு முன்னரும் கூட, ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சி நிகழ்வுகளில் தென்பட்டுள்ளார். 2017 உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் அவரது அத்தையுடன் பிரசாரக் களத்தில் இருந்த போது பெருமளவில் அறியப்பட்டார்.

லண்டனில் எம்.பி.ஏ படித்துள்ள ஆகாஷ், மாயாவதியின் சகோதரர் ஆனந்தின் மகன் ஆவார். இன்ஸ்டாகிராம்m சுயவிவரத்தில், அவர் தன்னை அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் இளம் ஆதரவாளர் எனவும், கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்திற்காக நிற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல்: பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் உதய்வீர் சிங் கூறுகையில், நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தும் பொறுப்பு ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாயாவதிக்கு பின்னர் ஆகாஷ் ஆனந்த் அவரது அரசியல் வாரிசாக இருப்பார் என்றார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை நெறிமுறையற்ற நடத்தைக்காக மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மக்களவை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்த டேனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் ஆனந்தின் நியமனம் நடந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios