இமாச்சல பிரதேசத்தில் குல்லு பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இமாச்சல பிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை, முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் அங்கு சிவப்பு வண்ண உச்சகட்ட எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட பாயங்கர நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இது குறித்து வெளியான அந்த நிலச்சரிவின் காட்சிகளில், குலு பகுதியில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதை நம்மால் பார்க்கமுடிகிறது.
மேலும் இந்த கடுமையான நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) போன்ற அவசரகால மீட்புக் குழுக்கள் அங்கு முழு வீச்சில் தங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து சிவப்பு வண்ண எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
அடுத்த மணிமகுடம்.. இந்தியாவில் தயாரான ASTRA ஏவுகணை - மிரட்டலாக தேஜஸ் போர் விமானத்தில் நடந்த சோதனை!
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ள அம்மாநில முதலமைச்சர், ஹிமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்த பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக காலி செய்யப்பட்டுள்ளனர்" என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் குண்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிலச்சரிவுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடுமையான வானிலையாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் என்றார் அவர். மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் சேதமடைந்த குலு-மண்டி நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.
BRICS மாநாட்டிற்கு பிறகு கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர்.. அடுத்த விசிட் ISROக்கு தான் - முழு விவரம்!
