அடுத்த மணிமகுடம்.. இந்தியாவில் தயாரான ASTRA ஏவுகணை - மிரட்டலாக தேஜஸ் போர் விமானத்தில் நடந்த சோதனை!
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜாஸ், நேற்று புதன்கிழமை கோவா கடற்கரையில் ஒரு புதிய மையில் கல்லை எட்டியது, அது நமது இந்திய நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ASTRA என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த ஏவுகணை சோதனை சுமார் 20,000 அடி உயரத்தில், தேஜஸ் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றும் மற்றும் இந்த சோதனையின் அனைத்து நோக்கங்களும் மிகசிறந்த வெற்றியை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவற்றின் சோதனை இயக்குனர் மற்றும் விஞ்ஞானிகளும், இந்திய ராணுவ விமான தகுதி மற்றும் சான்றளிப்பு மையத்தின் (CEMILAC) அதிகாரிகளும் இந்த சோதனை ஏவுதலைக் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
iPhone : புது போன் வாங்க போறீங்களா.? குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் 11, 12 & 14 - முழு விபரம் இதோ !!
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, ASTRA என்பது அதிநவீன BVR வகை ஏவுகணையாகும், இது ஆகாயத்திலிருந்து போர் விமானம் மூலம் தாக்கக்கூடிய வான்வழி ஏவுகணையாகும், இது மிகவும் கடினமான சூப்பர்சோனிக் வான்வழி இலக்குகளை கூட திறனோடு எதிர்கொண்டு அழிக்கவல்லது.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஆராய்ச்சி மையம் Imarat (RCI) மற்றும் DRDO இன் பிற ஆய்வகங்களால் கூட்டாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களில் இருந்து தாக்க கூடிய உள்நாட்டு அஸ்ட்ரா பிவிஆர் ஏவுகணை நரேந்திர மோடி அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை இந்தியா) திட்டத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜாஸ்-எல்சிஏவில் இருந்து அஸ்ட்ரா ஏவுகணையை உருவாக்கி சோதனை செய்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அஸ்ட்ரா ஏவுகணையை ஏவுவது, தேஜாஸின் போர்த்திறனை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவைத் தொட்ட சந்திரயான்-3! அடுத்து என்ன நடக்கும்? நிலவில் என்னென்ன ஆய்வுகள் செய்யும்?