Asianet News TamilAsianet News Tamil

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்.. 2 சிவசேனா எம்.பிக்கள் ராஜினாமா.. அதிர்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே

மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் 2 விசுவாசிகள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.

Maratha quoto issue : 2 Loyalists Of Eknath Shinde Resign As MPs  Rya
Author
First Published Oct 31, 2023, 7:55 AM IST | Last Updated Oct 31, 2023, 7:55 AM IST

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் விசுவாசிகளான மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் ஹிங்கோலியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.க்கள் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்தனர். ஹிங்கோலி எம்பி ஹேமந்த் பாட்டீல் திங்கள்கிழமை புதுதில்லியில் உள்ள மக்களவை செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார், அதே நேரத்தில் நாசிக் எம்பி ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஷிண்டேவுக்கு அனுப்பினார்.

ஹேமந்த் பாட்டீல் இதுகுறித்து பேசிய போது "லோக்சபா சபாநாயகர் அலுவலகத்தில் இல்லாததால், எனது ராஜினாமா கடிதம் அலுவலக செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனக்கும் ஒப்புகை கிடைத்துள்ளது," என தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில்,  இடஒதுக்கீடு கோரிக்கையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஹேமந்த் பாட்டீலிடம் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். எனவே. பாட்டீல் அந்த இடத்திலேயே தனது ராஜினாமா கடிதத்தை தயாரித்து போராட்டக்காரர்களிடம் கொடுத்தார்.

நாசிக்கில், சிவசேனா எம்.பி., கோட்சே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா போராட்டக்காரர்கள், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி, ராஜினாமா கடிதத்தை தயாரித்தார். ராஜினாமா கடிதத்தை, முதல்வர் ஷிண்டேவுக்கு அனுப்பி, விரைவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு, வேண்டுகோள் விடுத்தார். .

"கடந்த பல ஆண்டுகளாக, மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீட்டைப் பெற பாடுபட்டு வருகின்றனர். முன்பு, சமூகத்திற்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் பிழைக்கவில்லை. முதல்வராக ஆன பிறகு, நீங்கள் (ஷிண்டே) இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தினீர்கள்.

"மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக தசரா பேரணியில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மார்பளவு சிலை முன் நீங்கள் உறுதிமொழி எடுத்த பிறகு, மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உறுதியாக உணர்ந்தனர்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மராத்தா சமூகத்தின் வலுவான உணர்வுகளை கருத்தில் கொண்டு, நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார்.

இதனிடையே மத்திய மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஒருவர், மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஆதரித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கெவ்ராய் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ லட்சுமண பவார் கூறியதாவது: மராத்தா இடஒதுக்கீடு பிரச்னை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைக்கு எனது ஆதரவை வழங்குகிறேன். இந்த காரணத்தை ஆதரிப்பதற்காக, நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்," என்று பவார் சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணியின் பாஜக இடம்பெற்றுள்ளது. மேலும் அங்கு என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஒரு அங்கமாகவும் உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் விசுவாசிகளான மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் ஹிங்கோலியைச் சேர்ந்த சிவசேனா எம்பிக்கள் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஆதரித்து ராஜினாமா செய்ததை அடுத்து லட்சுமண பவாரின் இந்த முடிவு வந்துள்ளது.

ஆர்வலர் மனோஜ் ஜராங்கே தலைமையிலான மராத்தா சமூக உறுப்பினர்கள், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்கு அழுத்தம் கொடுக்க போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். , பீட் மாவட்டம் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் போது மிகப்பெரிய வன்முறை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios