Asianet News TamilAsianet News Tamil

Rishi Sunak: மன்மோகன் சிங்கை பிரதமராகவே நீங்கள் கருதவில்லை! சிதம்பரம், சசி தரூருக்கு பாஜக பதிலடி

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக, கருத்து தெரிவித்த, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சசி தரூர் இருவருக்கும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

Manmohan Singh isn't even considered Prime Minister by you!BJP hits back at Chidambaram and Shashi Tharoor.
Author
First Published Oct 25, 2022, 10:55 AM IST

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக, கருத்து தெரிவித்த, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சசி தரூர் இருவருக்கும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக், லிஸ் டிரஸிடம் தோல்வி அடைந்தார்.

ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் பாதை! பிரிட்டன் எம்.பி. முதல் பிரதமர் வரை!

Manmohan Singh isn't even considered Prime Minister by you!BJP hits back at Chidambaram and Shashi Tharoor.

பரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்களில் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தபிரதமர் தேர்வுக்கு ரிஷி சுனக், பென்னி மோர்டன்ட் இடையே நடந்த போட்டியிலும் மோர்டன்ட் விலகினார். இதையடுத்து, பிரிட்டனின் பிரதமராக முதல்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார்.

நம்மை அடிமையாக்கி ஆண்டவர்களை ஆளப் போகும் முதல் இந்திய வம்சாவழி ரிஷி சுனக்; யார் இவர்?

ரிஷி சுனக் பிரதமராவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் “ முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக். அமெரிக்க, பிரிட்டன் மக்கள், தங்கள் நாட்டில் பெரும்பான்மை இல்லாதவர்களைக்கூட நாட்டின் உயர்ந்த பதவிக்கு அமர்த்துகிறார்கள். இந்த செய்தியை இந்தியா கற்க வேண்டும், பெரும்பான்மைவாதத்தை கடைபிடிக்கும் கடைசிகளும் கற்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்

Manmohan Singh isn't even considered Prime Minister by you!BJP hits back at Chidambaram and Shashi Tharoor.

அதேபோல சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் வந்தால், பிரிட்டன் மக்கள் உலகிலேயே அரிதான செயலைச் செய்ததை ஏற்க வேண்டும். ரிஷி சுனக்கையும் இந்தியர்களாகிய நாம் கொண்டாட வேண்டும். பிரிட்டன்  போல் இந்தியாவில் நடக்குமா” எனத் தெரிவித்திருந்தார்

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்; பிரதமர் மோடி வாழ்த்து!

இருவருக்கும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பெரும்பான்மைவாதம் பேசுவோர், சிறுபான்மையினர் என்பது தகுதியாக இருக்கக்கூடாது, தகுதி மட்டுமே ஒருவர் தேர்வு செய்யப்பட அளவுகோலாக இருக்கவேண்டும் என்று ஷேசாத் தெரிவித்துள்ளார். 
மன்மோகன் சிங்,ஜாகிர் ஹூசைன், பக்ருதீன் அகமது, ஜியானி ஜெயில் சிங், அப்துல் கலாம்  ஆகியோர் சிறுபான்மையினர் இல்லையா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அவர் பதிவிட்ட கருத்தில் “ சில வெளிப்படையான காரணங்களுக்காக, டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக ப.சிதம்பரமும், சசி தரூரும் உண்மையாகவே ஒருபோதும் பிரதமராக கருதமாட்டார்கள் என நினைக்கிறேன். 

அதுமட்டுமல்லாமல், ஜாகிர் ஹூசைன், பக்ருதீன் அகமது, ஜியானி ஜெயில் சிங், அப்துல் கலாம் ஆகியோரும் ஜனாதிபதியாக இருந்துள்ளார்கள். தகுதிதான் அளவு கோளாக இருக்க வேண்டும், சிறுபான்மை அல்ல. துரதிர்ஷ்டம் காங்கிரஸுக்கு ரிஷி சுனக் மூலம் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios