மணிப்பூர் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஹீரோதாஸ் கைது! புகைப்படம் வெளியிட்ட காவல்துறை!
மணிப்பூர் சம்பவத்தில் கைதாகியுள்ள குற்றறவாளிகளில் ஒருவரின் பெயர் ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி என்பதும், வயது 32 வயது என்பதும் தெரிய வந்துள்ளது.

மணிப்பூர் சம்பவத்தில் பெண்ணை பிடித்து இழுத்து சென்ற பச்சை சட்டை அணிந்து இருந்த முக்கிய குற்றவாளி இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி என்பதும், வயது 32 வயது என்பதும், இவரது தந்தை ஹெச். ராஜென் மெய்தி என்பதும் தெரிய வந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினரான மெய்தீ சமூகத்தினருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்குமு் குக்கி பழங்குடியி மக்களுக்கும் இடையே மே 3ஆம் தேதி முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. மெய்தீ சமூகத்தினர் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். குக்கி சமூகத்தினர் அதனை எதிர்க்கின்றனர்.
மெய்தீ சமூகத்திற்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்து குக்கி பழங் குடியினர் ஒற்றுமை பேரணி நடத்திபோது வன்முறை தொடங்கியது. மே 3 முதல் மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவி வைரலானது.
நாட்டையே தலைகுனிய வைக்கும் இந்தச் சம்பவம் நடந்து 77 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, வீடியோவில் காணப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ள மணிப்பூர் காவல்துறை அவரது புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
32 வயதான அந்த அந்த நபர் ராஜன் மெய்தியின் மகன் ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி என்றும் சம்பவம் நடந்தபோது அவர் பச்சை சட்டை அணிந்திருந்தார் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகளுடன் மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 12 குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.