முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் தீவிரவாதி என்று அழைப்பீர்களா, இதுபோன்று பேசுவதற்கு எவ்வாறு உங்களுக்கு துணிச்சல் வந்தது என்று கேட்டு கர்நாடகத்தில் பேராசிரியரை முஸ்லிம் மாணவர் ஒருவர் வெளுத்து வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் தீவிரவாதி என்று அழைப்பீர்களா, இதுபோன்று பேசுவதற்கு எவ்வாறு உங்களுக்கு துணிச்சல் வந்தது என்று கேட்டு கர்நாடகத்தில் பேராசிரியரை முஸ்லிம் மாணவர் ஒருவர் வெளுத்து வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் முஸ்லிம் மாணவர் ஒருவரை தீவிரவாதி என்று அழைத்துள்ளார்.
மின்சாரச் சட்டத்திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது சந்தேகம்?
அதற்கு அந்த முஸ்லிம் மாணவர் பேராசிரியரை வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பேராசிரியர் அசோக் ஸ்வெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் அசோக் ஸ்வெயின், யுனெஸ்கோவின் தலைவராகவும் உள்ளார். அசோக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவரை தீவிரவாதி என அழைத்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் நிலைஇதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேராசிரியரை நோக்கி, அந்த மாணவர், மிகவும் கோபமாக, “ என்னை நீங்கள் தீவிரவாதி என்று அழைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது? எனக் கேட்டார்.
அதற்கு பேராசிரியர் “ நான் நகைச்சுவைக்காக, விளையாட்டுக்காக அவ்வாறு அழைத்தேன். நீங்களும் என்னுடைய மகனைப் போன்றவர்தானே” என்று பதில் அளித்தார்.
அதற்கு அந்த மாணவர் “என்னுடைய மதத்தை நீங்கள் கிண்டல் செய்ய முடியாது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் இதைத்தான் சந்தித்துவருகிறார்கள். இது ஒன்றும் விளையாட்டாக எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்
உடனடியாக அந்த பேராசிரியர் மாணவரிடம் மன்னிப்புக் கோரி, நீங்கள் என் மகனைப் போன்றவர் மன்னித்துக்கொள் என்று கூறினார்.
அதற்கு அந்த மாணவர், பேராசிரியரை நோக்கி “ உங்கள் மகனை நீங்கள் தீவிரவாதி என்று அழைப்பீர்களா? வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் இருக்கும் போது அவர்கள் முன்னிலையில் என்னை நீங்கள் தீவிரவாதி என்று எவ்வாறு அழைக்க முடியும். பேராசிரியர் என்பவர் பேராசிரியர் போல் நடக்க வேண்டும். நீங்கள் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் உங்களின் மனநிலையை மாற்றிவிட முடியாது, இது உங்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலி வைரலானது. இதையடுத்து, அந்த மாணவருக்கு பல்கலைக்கழ நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் தரப்பட்டது. அந்த பேராசிரியர் தொடர்ந்து வகுப்புகளை எடுக்கவிடாமல் தடை செய்யப்பட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தனியாக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
துணிச்சலுடன் பேராசிரியரைப் பார்த்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக் குவிந்துவருகிறது. அதில் ஒருவர் குறிப்பிடுகையில் “ அந்த மாணவர் தனக்காக குரல்கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்டகாலமாக மக்களுக்கு பொறுமை கற்றுக்கொடுக்கப்பட்டது.
நெருங்கும் குஜராத் தேர்தல்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!!
ஆனால், யாரும் பாகுபாடு, முன்கூட்டியே மனதில் வைத்து திட்டமிட்டு பேசுதல் போன்ற பேராசிரியரின் செயலை யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அந்த மாணவர் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்
