ரயிலில் வழங்கப்பட்ட சமோசாவில் கிடந்தது இதுவா ? கொந்தளித்த நெட்டிசன்கள் - பதறிய IRCTC
ரயிலில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் மஞ்சள் காகிதம் ஒன்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை - லக்னோ ரயிலில் பயணித்த பயணி ஒருவர், ரயிலில் வழங்கும் (IRCTC) சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
அதில், ‘ஐஆர்சிடிசி பேண்ட்ரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அதில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு பார்த்தேன் அதில் ஃபைபர் காகிதம் ஒன்று இருந்ததை கண்டு அச்சமடைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி பலரும் ஐஆர்சிடிசிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக
இந்நிலையில் ஐஆர்சிடிசி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘உணவில் காகிதம் இருப்பதை கண்டு வருத்தப்படுகிறோம். இதுபோன்ற சிரமத்திற்கு உங்களை கொண்டு சென்றதற்கு மனிக்கவும். பிஎன்ஆர் மற்றும் மொபைல் எண்ணை தன் ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டது. ஐஆர்சிடிசி குறித்த விளக்கத்தை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு