Asianet News TamilAsianet News Tamil

ஏன் கலர் கலரா வளையல் போடுற.. மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவனின் குடும்பம் - மொத்த பேரையும் தூக்கிய போலீஸ்!

Mumbai : உலகம் என்னதான் முற்போக்காக வளர்ந்தாலும், இன்றளவும் பெண்களுக்கு எதிராக பெரு நகரங்களில் கூட பல வன்கொடுமைகள் நடக்கிறது. அது போன்ற ஒரு சம்பவம் தான் மும்பையின் நவி பகுதியில் நடந்துள்ளது.

Man thrashed young wife for wearing fashionable bangles case field against mans family ans
Author
First Published Nov 18, 2023, 11:53 AM IST | Last Updated Nov 18, 2023, 11:53 AM IST

ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு வந்த மருமகள் பல வண்ணங்கள் மற்றும் மாடர்ன் முறையில் வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை கண்முடித்தனமாக தாக்கியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

மும்பை நகரை நவி பகுதியில் வசித்து வரும் ஒரு ஆண் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று போல்ஸ் அதிகாரி ஒருவர் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்த பெண் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத் துறையில் மாற்றம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம்!

புனே நகரை சேர்ந்த அந்த 23 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரபேல் எம்ஐடிசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண் அளித்த புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிரதீப் ஆர்கடே (30) அவர் மாடர்னாக வளையல்களை அணிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருடன் பிரச்சினை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பல நாட்களாக அந்த பெண்ணிடம் தக்காரு செய்து வந்த நிலையில் கடந்த நவம்பர் 13 அன்று, அந்த வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்நிலையில் அத பெண்ணின் 50 வயது மாமியார் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து பல முறை அறைந்துள்ளார். அவரது கணவர் அப்பெண்ணை பெல்ட்டால் அடித்துள்ளார். அதே நேரத்தில் அந்த கணவரின் உறவினர் பெண் ஒருவரும் அந்த பெண்ணை தரையில் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். 

"இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அந்த பெண் புனேவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று அங்கு புகார் அளித்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக அந்த வழக்கு நவி மும்பைக்கு மாற்றப்பட்டது," என்று அவர் கூறினார்.

உத்தரகண்ட் சுரங்க விபத்து.. 6 நாட்களாக சிக்கியுள்ள பணியாளர்கள் - திடீரென கேட்ட சத்தத்தால் நின்ற மீட்பு பணி!

அந்த பெண்ணை தாக்கியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 34 (பொது நோக்கம்), 504 (உட்போர்த்தனமான அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios