உத்தரகண்ட் சுரங்க விபத்து.. 6 நாட்களாக சிக்கியுள்ள பணியாளர்கள் - திடீரென கேட்ட சத்தத்தால் நின்ற மீட்பு பணி!
Uttarakhand Tunnel : உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பணியாளர்களை மீட்கும் பணி கடந்த ஆறு நாட்களாக நடந்து வருகின்றது. இந்நிலையில் மற்றொரு தடையை சந்தித்துள்ளனர் மீட்பு குழுவினர். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நேற்று பிற்பகல் 2:45 மணிக்குப் பிறகு தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்கு பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நிபுணர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர்காசி அருகே கட்டுமானப் பணியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 4.5 கிமீ சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
"இந்நிலையில் நேற்று பிற்பகல் 2:45 மணியளவில் நடந்த மீட்பு பணியின் போது, சுரங்கப்பாதையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் குழுவினருக்கு பெரிய அளவிலான விரிசல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் உள்ள மற்றும் அங்கு பணிபுரியும் குழுவினர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது" என்று தேசிய நெடுஞ்சாலைகள் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHIDCL) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஞானவாபி மசூதி: அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் கோரிய தொல்லியல் துறை!
"மேலும் சரிவு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன, அதன்படி குழாய் தள்ளும் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது" என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமையைச் சமாளிக்க, அனைத்து அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வல்லுநர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டதால், தொடர்ந்து விழுந்து வரும் குப்பைகளால் மீட்புப் பணிகள் மந்தமடைந்துள்ளன. 800 மிமீ மற்றும் 900 மிமீ விட்டம் கொண்ட குழாய்களை ராட்சத துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் பதிக்க, மீட்புப் பணியாளர்கள் 60 மீட்டர் வரை துளையிட்டு, சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையை உருவாக்க வேண்டும்.
"இந்த சூழலில் ஐந்தாவது குழாயின் நிலைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இடிபாடுகளால் இயந்திரத்தை மேலும் தள்ள முடியவில்லை என்றும், இயந்திரத்தின் தாங்கு உருளைகள் பழுதடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்படுவதைத் தவிர்க்க நங்கூரம் மூலம் இயந்திரத்தை சரிசெய்ய திட்டமிடப்பட்டது.
ரயில்வே அனுப்பிய ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்.. நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளுக்கு சிக்கல்.. என்ன நடந்தது?
900 மிமீ விட்டம் கொண்ட குழாயை, குழாயின் அதே சாய்வுடன் இயந்திரம் வைத்தால் மட்டுமே, குழாயை மேலும் தள்ளுவது சாத்தியமாகும் என்று பணியைச் செயல்படுத்தும் சிறப்பு நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள ஒரு குகையில் சிக்கிய குழந்தைகளை வெற்றிகரமாக மீட் குழு உட்பட தாய்லாந்து மற்றும் நார்வேயில் இருந்து எலைட் மீட்புக் குழுக்கள், இதில் உதவுவதற்காக மீட்புக் குழுவினருடன் இணைந்துள்ளனர்.