அம்மா குளிப்பதை  பாத்ரூம் ஓட்டை வழியாக வீடியோ எடுத்த நண்பனை கொடூரமா மகன் குத்திக் கொன்றார். இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத், சந்தாநகரை சேர்ந்தவர் அஜய், கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். அஜய் மற்றும் சம்பத் சிறு வயது முதல்  நண்பர்களாக இருந்து வந்தார்கள். இதனால் சம்பத் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவாராம். இப்படி அஜய் ஒருநாள் வந்திருந்தபோது, பாத்ரூமில் சம்பத்குமாரின் அம்மா குளித்துக்கொண்டிருந்தார். இதை கதவு வழியாக எட்டிப் பார்த்த அஜய், அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

தனது நண்பனே இப்படி அம்மா குளிப்பதை வீடியோ எடுத்தானா என்ற விஷயம்  எப்படியோ சம்பத்க்கு தெரியவந்தது. எனவே தனது நண்பனை கொலை செய்ய தீர்மானித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் பாரில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சம்பத்க்கு மட்டும் அதிகமாக சரக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் சம்பத் தனது ஸ்கூட்டரில் அவரது நண்பரை அழைத்து கொண்டு சந்தாநகர்க்கு வந்துள்ளார்.

அங்கே வைத்து, தனது தாய் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் குறித்து அஜயிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சம்பத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சம்பத், தனது நண்பன் அஜய் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அஜய் மருத்துவமனை செல்லும்  வழியில் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.