Asianet News TamilAsianet News Tamil

குடை பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் தூக்கம் போட்ட முதியவர்! வைரலாகும் விநோத சம்பவம்!!

அந்த நபர் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, லோகோ பைலட் ரயிலை முன்கூட்டியே நிறுத்திவிட்டார். தூக்கத்தில் ஆழ்ந்து இருந்த முதியவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் ரயில் வந்து நிற்கிறது.

Man sleeps under umbrella on railway track in Uttar Pradesh sgb
Author
First Published Aug 25, 2024, 6:42 PM IST | Last Updated Aug 25, 2024, 6:46 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஒரு முதியவர் தண்டவாளத்தில் ஹாயாகக் குடை பிடித்தபடி தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு ரயில் சரியாக அவருக்கு அருகில் வந்து நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் பயனர் சச்சின் குப்தா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நபர் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, லோகோ பைலட் ரயிலை முன்கூட்டியே நிறுத்திவிட்டார். தூக்கத்தில் ஆழ்ந்து இருந்த முதியவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் ரயில் வந்து நிற்கிறது.

“உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் என்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஒருவர் குடையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவரை எழுப்பி தண்டவாளத்தில் இருந்து அகற்றினார். அதற்குப் பின் ரயில் கடந்து சென்றது” என சச்சின் குப்தா தனது பதிவில் கூறியுள்ளார்.

பட்டைய கிளப்பும் புதிய ஹீரோ கிளாமர் 125! ஏர் கூல்டு எஞ்சினுடன் ஒரு மைலேஜ் பைக்!

ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்திருக்கும் இந்த வைரல் வீடியோ சமூக ஊடக பயனர்களிடமிருந்து பலவிதமான எதிர்வினைகளைக் குவித்தது. ஒரு பயனர், "என்ன ஒரு புத்திசாலித்தனம்" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். “ஒரே குழப்பமா இருக்கு. அவர் ஏன் குடை பிடித்துப் படுத்திருக்கிறார்?” என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொரு எக்ஸ் பயனர், "எமதர்ம ராஜா இந்த லோகோ பைலட்டை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்" என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.

தற்காப்புக்காக லெபனானைத் தாக்கிய இஸ்ரேல்... ராக்கெட் மழை மொழிந்து பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios