WATCH: உ.பி.யில் தேசியக் கொடியை வைத்து பழங்களை சுத்தம் செய்யும் நபர்!

வீடியோவில், அந்த நபர் தேசியக் கொடியை வைத்து தர்பூசணி பழங்கள் மீது இருக்கும் தூசியைத் தட்டும் காட்சி உள்ளது. மூவர்ணக் கொடியை அவமதிக்கும் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது முதல் முறையல்ல.

Man shamelessly use Indian national flag to clean fruits in Jhansi, UP Police order probe

ஒருவர் இந்திய தேசியக் கொடியைப் பயன்படுத்தி தனது கடையில் உள்ள பழங்களை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த சம்பவத்தின் வீடியோவை உள்ளூர்வாசிகள் படம்பிடித்து டுவிட்டரில் பதிவேற்றியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோவில், அந்த நபர் தேசியக் கொடியை வைத்து தர்பூசணி பழங்கள் மீது இருக்கும் தூசியைத் தட்டும் காட்சி உள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறை, ஜான்சி காவல்துறை ஆகியவற்றின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களும் டேக் செய்யப்பட்டுள்ளன.மூவர்ணக் கொடியை அவமதிக்கும் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வருவது முதல் முறையல்ல.

Viral Video: யானையில் வாலை பிடித்து திருகிய நபர்! பாகனைத் தூக்கி வீசிய யானை! - பதைபதைக்கும் வீடியோ!

இதற்கு முன் 52 வயதான ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பின்னர் அவர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அந்த நபருக்கு எதிராக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

"இந்த விவகாரத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பஜன்புரா காவல் நிலையத்தில் 1971 தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான அந்த நபர் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், தவறுதலாகச் செய்ததாகவும் கூறினார் என அந்த அதிகாரி கூறினார்.

இந்தியாவில் தவறான தகவல் இல்லாத இணையத்தை உருவாக்குவதே நோக்கம்: சீதாராம் யெச்சூரிக்கு ராஜீவ் சந்திரசேகர் பதில்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios