கண்முன் ஊசலாடிய நண்பனின் வாழ்க்கை.. துண்டை வைத்து உயிரை காத்த தோழன்.. குவியும் பாராட்டு - வைரல் வீடியோ!

உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம், பலர் அதை தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தும் இருப்போம். இந்நிலையில் அதற்கு உதாரணமாக அரங்கேறியுள்ளது, நெஞ்சை சில நொடிகள் பதைபதைக்க வைத்த ஒரு சம்பவம்.

Man saved his friend who encountered a electrocution video viral on internet

இணையத்தில் நாம் தினமும் பார்க்கும் பல வீடியோக்களில் சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பும் பல அதிர்ஷ்டசாலிகளை நாம் பார்த்திருப்போம். அதுபோலத்தான் அண்மையில் வெளியான ஒரு வீடியோவில் சாவின் விளிம்பிற்கே சென்ற ஒருவரை அருகில் இருந்த அவருடைய நண்பரின் சமயோகித புத்தியால் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரால் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

வெளியான அந்த வீடியோவில் ஒரு நபர் அருகில் இருந்த தனது நண்பருடன் பேசிக் கொண்டே தனது கடையின் கதவுகளை மூட துவங்குகிறார். கடையின் கதவை முடிய அவர் இறுதியாக ஒரு கிரில் கேட்டை மூடுவதற்கு முன்பாக கடவுளை வணங்கி விட்டு தன் காலணிகளை அகற்றிவிட்டு அந்த கிரில் கதவை மூடத் தொடங்குகிறார். 

வாகனம் மோதி இறந்த குட்டி மாடு.. இறந்தது தெரியாமல் குட்டியை தேடும் தாய் காட்டு மாடு - வைரல் வீடியோ

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்கனவே அந்த கிரில் கதவுகளில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் அவரை தாக்குகிறது. உடனடியாக அந்த கிரில் கதவிலிருந்து தனது கைகளை எடுக்க முடியாமல் தொடர்ச்சியான மின்சார தாக்குதலுக்கு அவர் உள்ளாகிறார். 

அப்பொழுது அருகில் இருந்த அவருடைய நண்பர் செய்வதறியாது சில நொடிகள் திகைத்து நின்றாலும், சட்டென்ற தனது சமயோசித புத்தியால், அவர் கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து தனது நண்பரின் கழுத்தின் மேல் போட்டு அவரை வெடுக்கென்று கீழே இழுத்துப் போட சாவின் விளிம்பில் இருந்த அவர் காப்பாற்றப்படுகிறார். 

உடனே அருகில் இருந்த சிலர் அங்கே ஓடி வந்து அவருக்கு உதவி செய்கின்றனர். உண்மையில் இன்னும் சில நிமிடங்கள் அந்த நண்பர் செய்வது அறியாது அங்கேயே நின்று கொண்டிருந்தாள், நிச்சயம் அந்த நபரின் உயிர் பிரிந்திருக்கும். ஆனால் உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழியை உண்மையாக்கும் வண்ணம் செயல்பட்டுள்ள அந்த நபருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேரில் சந்தித்த நடிகர் யோகி பாபுவுக்கு விபூதி பூசி ஆசிர்வாதம் வழங்கிய முதல்வர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios