சினிமாவை மிஞ்சிய நிஜம்.. ஒரே நேரத்தில் 3 பேரை திருமணம் செய்து காதல் மன்னன்..!
மத்திய பிரதேசத்தில் ஒருவர் மூன்று பெண்களை காதலித்து ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டம் அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா என்பவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் 3 பெண்களை காதலித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக 3 பெண்களுடனும் லிவின் ரிலேஷன்ஷிப் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஒரு நபர் மூன்று பெண்களுடன் 15 ஆண்டுகள் லிவின் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை வாழ்ந்துவந்த நிலையில் 3 பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் ஒரு பெண்ணை காதலித்து பிரேக்அப் ஆகாமல் திருமணம் செய்து கொள்வது பெரும்பாடாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் மூன்று பெண்களை காதலித்து ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டம் அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா என்பவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் 3 பெண்களை காதலித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக 3 பெண்களுடனும் லிவின் ரிலேஷன்ஷிப் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதன்மூலமாக 6 குழந்தைகளும் பிறந்துள்ளது. ஆனால், பழங்குடியின முறைப்படி ஒருவர் திருமணம் செய்யவில்லை எனில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்பதால், மூவரையும் சமர்த் மவுரியா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 30ம் தேதி தனது 6 குழந்தைகள் முன்னிலையில் மூவரையும் திருமணம் செய்துள்ளார். ஒரே நேரத்தில் 3 பேரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.