மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல்.. நிதானமாக யோசித்து செயல்பட்ட கணவன் - இறுதியில் காதலன் வைத்திருந்த ட்விஸ்ட்!
கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து அந்த காதலனை அடித்து உதைத்து இருவரையும் ஊரை விட்டு விரட்ட ஆயத்தமாகி உள்ளனர்.

இருமனம் இணையும் ஒன்றைத் தான் திருமணம் என்று கூறுவார்கள், அது பல இடங்களில் உண்மையாக்கப்பட்டு கொண்டுதான் வருகிறது. ஆனால் ஒரு சில சமயம் தங்கள் காதல் வாழ்க்கையை பிரிந்து, வேறு ஒருவரை மணம் முடிக்கும் கட்டாயமும் சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது. அப்படி திருமணம் ஆகும் பட்சத்தில், அதிலிருந்து விடுபட்டு தன் காதலோடு போய் இணைபவர்களும் உண்டு. நமக்கு இவ்வளவுதான் விதி என்று நினைத்து திருமணம் செய்துகொண்டவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் உண்டு.
அந்த வகையில் பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நவாடா பகுதியில் கணவன் மனைவி இருவர் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கணவன் இரவு நேர வேலைக்கு செல்லும் பொழுது அவருடைய மனைவி தன்னுடைய காதலனை காண சென்று விடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அடிக்கடி அந்தப் பெண் தன் காதலனை சந்திக்க சென்றது கணவனின் உறவினர்களுக்கு ஒரு நாள் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள் : ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி.. இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பது ஏன்?
கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து அந்த காதலனை அடித்து உதைத்து இருவரையும் ஊரை விட்டு விரட்ட ஆயத்தமாகி உள்ளனர். ஆனால் அப்பொழுது அங்கு வந்த அந்த கணவர் நடந்து கொண்டது, யாரும் சற்றும் எதிர்பாராதது. தன் மனைவி இன்னொருவருடன் இருப்பதை கண்ட கணவர், சற்று நிதானமாக நின்று என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.
அப்பொழுது இருவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் தெரிய வர, அங்கிருந்த சிவன் கோவிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று அந்த காதலுடன் தனது மனைவிக்கு திருமணம் செய்து வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அந்த கணவர். அந்த கணவரின் நல்ல மனதை ஊரார் பாராட்ட, அந்த காதலன் வைத்திருந்தது தான் அல்டிமேட் ட்விஸ்ட்.
அந்த காதலனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்களாம், இந்த தகவல் அந்த காதலிக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. ஆனால் அந்த கணவர் நின்று நிதானமாக செய்தது பாராட்டிற்கு உரியது.
இதையும் படியுங்கள் : இந்திய ஏவுகணைகள்.. ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்குக் கசியவிட்ட டிஓர்டிஓ!