Asianet News TamilAsianet News Tamil

லிவ் இன் உறவு.. வாடகை அறையில் பிணமாக கிடந்த இளைஞர் - உடனிருந்த பெண் எங்கே? விசாரணையை துவங்கிய போலீசார்!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தனது வாடகை அறையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் திடுக்கிடும் தகவல் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Man found dead in rented room live in relationship partner fled the scene ans
Author
First Published Oct 20, 2023, 9:00 PM IST

நந்தா காவல் நிலையப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்து கிடந்த அந்த நபர், ஒரு பெண் துணையுடன் தான் அந்த அறையில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இப்பொது தப்பி ஓடிவிட்டார் என்றும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தற்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்த அந்த இளைஞரின் தந்தை அளித்த வாக்குமூலத்தில், தனது மகன் லிவ் இன் உறவில் இருந்த அந்த பெண் தான், தனது மகனை கொன்றுவிட்டு தப்பியுள்ளதாக கூறியுள்ளார். 

கள்ளக்காதலனுக்காக விட்டுச் சென்ற தாயை தேடி சென்று வெட்டிய மகன்; முத்து நகரில் பரபரப்பு

இந்நிலையில் பிரேதபரிசோதனை முடிக்கப்பட்டு தற்போது அந்த இளைஞரின் உடல் அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலைய அலுவலக அதிகாரி முகேஷ் மீனா கூறுகையில், கந்த்வா மாவட்டத்தில் உள்ள கெடி - காட் பகுதியைச் சேர்ந்த நரேஷ் தன்வார் என்ற நபரின் இரத்தக் கறை படிந்த உடல் கடந்த புதன்கிழமை மாலை கணேஷ் காலனியில் உள்ள ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கனமான கல்லும் அந்த அறையில் இருந்து மீட்கப்பட்டது, என்றார். நரேஷ் தன்வார் இறந்து கிடந்த அந்த நபர் இருந் அறை பூட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். புதன்கிழமை மாலை வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தபோது தான் இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த பெண்ணை போலீசார் தேடி வரும் நிலையில், வியாழக்கிழமை மாலை சம்பவ இடத்தை அடைந்த அந்த இளைஞரின் தந்தை, தனது மகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுடன் வாழத் தொடங்கியதாகவும் கூறினார்.

இந்தியாவின் ஸ்பீட் ட்ரெயின்.. ரேபிட்-எக்ஸ் டிக்கெட்டை இனி App-ல் வாங்கலாம்.. முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios