Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலனுக்காக விட்டுச் சென்ற தாயை தேடி சென்று வெட்டிய மகன்; முத்து நகரில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மகன், கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற தாய், கள்ளக்காதலனை மகன் ஓட ஓட வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mother and her boyfriend attacked by young man in thoothukudi vel
Author
First Published Oct 20, 2023, 6:18 PM IST | Last Updated Oct 20, 2023, 6:18 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது 45). இவருக்கு திருமணமாகி புஷ்பராஜ் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேச மூர்த்தி என்பவரை காதலித்துள்ளார். இருவரின் நெருக்கம் அதிகமாகவே கணவர் மற்றும் மகனை பிரிந்து கணேச மூர்த்தியுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.என் புரம்  பகுதிக்கு வந்து குடியேறி உள்ளார். 

இவர்களுடன் கணேஷ மூர்த்தியின் தம்பி ரமேஷும் இருந்துள்ளார். தொடர்ந்து இங்கேயே தள்ளுவண்டி கடையில் வடை, போண்டா ஆகியவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மாரீஸ்வரியின் முதல் கணவரின் மகன் புஸ்பராஜ் தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்து வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் புஷ்பராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு கணேஷ மூர்த்தி, ரமேஷ் மற்றும் தாய் மாரீஸ்வரி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளார். 

அதிமுக பெண் தலைவரை நிகழ்ச்சி முழுவதும் நிற்கவைத்துவிட்டு பெண் உரிமை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி

இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் மற்றும் கணேஷ மூர்த்தி இருவரும் புஸ்பராஜை தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சோதனையால் பரபரப்பு 

தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே கள்ளக்காதலாலில் முதல் கணவரின் மகனே அம்மா உட்பட மூன்று பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios