சில்வாஸ்ஸா என்ற இடத்தில் கறிக்கடையில் பணிபுரியும் ஒருவர் சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்யும் துணியாக தேசியக் கொடியை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டையூ டாமன் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சில்வாஸ்ஸாவைச் சேர்ந்த ஒருவர் கோழிக்கறியை மூவர்ணக் கொடியால் சுத்தம் செய்வதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனால், காவல்துறையினர் சனிக்கிழமை அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதைப் பற்றி சில்வாஸ்ஸா காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் தான் பணிபுரிந்த கடையில் கோழியைச் சுத்தம் செய்வதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தியதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

"புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து, தேசிய கௌரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971 இன் பிரிவு 2 இன் கீழ் அவரைக் கைது செய்துள்ளோம்" என காவல்துறை அதிகாரி சொல்கிறார். அந்த நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் அளிக்கும் தகவல் மூலம் தெரிகிறது.

கேரளா ஸ்டைலில் கொச்சியைக் கலக்கிய பிரதமர் மோடி! ஆயிரக்கணக்கானோர் கூடி மலர் தூவி வரவேற்பு!

தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் 2வது பிரிவு பொது இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ தேசியக் கொடியை எரித்தல், சிதைத்தல், அவமானப்படுத்துதல், கறைபடுத்துதல், அழித்தல், மிதித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடை செய்கிறது. இதன்படியே வீடியோவில் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒருவர் இந்திய தேசியக் கொடியைப் பயன்படுத்தி தனது கடையில் உள்ள பழங்களை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

லண்டன் செல்கிறது என்ஐஏ குழு! இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் குறித்து விசாரணை