மத்திய பிரதேசத்தில் ஜிம் ஒன்றில், இளைஞர் ஒருவர் பெண்ணை தாக்கிய வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஜிம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஜிம்மில் ஆண் - பெண் என இரு பாலரும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த ஜிம்மில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து முடித்தப்பின் அவர்கள் உரையாடுவது வழக்கம். அப்படி உரையாடிக் கொண்டிருந்த போது, இளைஞர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று அங்கிருந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். 

பெண்ணின் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞன், பெண்ணின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். பின்னர், அவரை காலால் எட்டி உதைத்தும் உள்ளார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பாதிவாகியுள்ளது. இந்த வீடியோ, தற்போது வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.