கோபம், எந்த ஒரு சாதாரண விஷயத்தையும் பூதாகரமாக மாற்றி விடும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம்.

ஹைதராபாத்தில், தான் சாப்பிட்ட பிரியாணிக்கு கூடுதலாக ரைத்தா கேட்ட 32 வயது வாலிபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள புஞ்சங்குட்டா என்கின்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது மெரிடியன் என்கின்ற ஒரு உணவகம். 

இந்நிலையில் இந்த உணவகத்திற்கு வந்த லியாகத் என்கின்ற நபர் தனது நண்பர்களுடன் இணைந்து அந்த உணவகத்தில் சாப்பிட்டு உள்ளார். அப்பொழுது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியாணிக்கு கூடுதலாக கொஞ்சம் ரைத்தா வழங்கும்படி அவர் கேட்க நிலையில், இந்த விவகாரத்தில் அவருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. 

சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி கொலை.! முக்கிய சாலையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் மக்கள்

வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இறந்த அந்த நபர் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து ஹோட்டல் ஊழியர்களுடன் கடுமையாக மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒரு கட்டத்தில் இரு கும்பலும் கடுமையாக தாக்கிக்கொள்ள விவகாரம் போலீசாரிடம் சென்றுள்ளது. 

உடனடியாக போலீஸ் அதிகாரிகள் 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து சண்டையை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு முன்பாக கடுமையாக தாக்கப்பட்ட அந்த லியாகத் என்கின்ற அந்த நபர் மூச்சு விட முடியாமல் நெஞ்சு வலியால் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். 

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது அவருடைய உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய போலீசார் அனுப்பிய நிலையில், அவர் மாரடைப்பால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இருந்தாலும் அவருடைய இறப்பின் உண்மை காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த இறப்பு சம்பவம் குறித்து குறிப்பிட்ட அந்த உணவகத்தின் ஊழியர்கள் மற்றும் மேனேஜர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

விமானத்தில் சக பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: லேண்ட் ஆனவுடன் தூக்கிய போலீஸ்!