விமானத்தில் சக பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: லேண்ட் ஆனவுடன் தூக்கிய போலீஸ்!

விமானத்தில் சக பயணிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை போலீசர் கைது செய்துள்ளனர்

Accused Sexually harassing a passenger onboard flight smp

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ பயணிகள் விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணத்த பயணி ஒருவர் சக பயணிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, விமானம் கவுகாத்தியில் தரையிறங்கியவுடன் அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்த எந்த குறிப்பிட்ட விவரங்களையும் விமான நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. அதாவது பாதிக்கப்பட்டவர் யார்? குற்றம் சாட்டப்பட்ட நபர் யார்? சம்பவம் எப்படி நடந்தது? என எந்த தகவலையும் இண்டிகோ நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சென்னையில் 6ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள்

“மும்பை - கவுகாத்தி இடையே இண்டிகோ விமானம் 6E- 5319 இல் பயணித்த பயணி ஒருவருக்கு சக பயணி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெறப்பட்ட புகாரையடுத்து, விமானம் தரையிறங்கியதும் கவுகாத்தி காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.” என்று இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios