குழந்தைகள் பள்ளி சீருடை அணியவில்லை என்றாலும், கையில் புத்தக பைகளுடன் செல்வதை நம்மால் புகைப்படத்தில் காணமுடிகிறது.

குழந்தைகளை பள்ளிக்கோ, அல்லது பிற இடங்களுக்கோ அழைத்துச்செல்லும்போது மிக மிக கவனத்துடன் அழைத்து செல்லவேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஒரு "காமன்சென்ஸ்". ஆனால் மும்பை நகரை சேர்ந்த ஒருவர் ஒரு சிறிய இரு சக்கர வாகனத்தில் 7 சிறுவர்களை அழைத்து கொண்டு சாலையில் ஆபத்தான முறையில் வலம்வந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முன்னவர் ஷா என்ற அந்த 39 வயது ஆடவர், 7 சிறுவர்களுடன் தனது வாகனத்தில் நெரிசலான சாலையில் சென்ற காணொளி இணையத்தில் வைரலானது. ஷா ஒரு தேங்காய் வியாபாரி என்று கூறப்படுகிறது, சம்பம் நடந்தபோது தனது நான்கு குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த மூன்று குழந்தைகளை தனது ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு அவர் சென்றுள்ளார். 

இதையும் படியுங்கள் : ஐந்து வந்தே பாரத் ரயில்கள் - துவங்கி வைத்தார் பிரதமர் மோடி!

குழந்தைகள் பள்ளி சீருடை அணியவில்லை என்றாலும், கையில் புத்தக பைகளுடன் செல்வதை நம்மால் புகைப்படத்தில் காணமுடிகிறது. இவர்கள் சாலையில் செல்வதை கண்ட ஒருவர் அதை வீடியோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் காவல் துறை மற்றும் அம்மாநில முதல்வரை இணைத்து போஸ்ட் போட்டுள்ளார். 

இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெரிசல் நிறைந்த சாலைகளில் குழந்தைகளோடு பயணிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், கைதான ஷா போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை!