Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் பயங்கரம்.. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!

கடலூர் மாவட்டம்  மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் மதியழகன், மதிவாணன் இருவருக்கும் இடையே ஊராட்சி தேர்தல் போட்டியிடுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

panchayat leader husband murder in cuddalore... police investigation
Author
First Published Jun 27, 2023, 12:36 PM IST

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம்  மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் மதியழகன், மதிவாணன் இருவருக்கும் இடையே ஊராட்சி தேர்தல் போட்டியிடுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மதிவாணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதிவாணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு சமீபதத்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

panchayat leader husband murder in cuddalore... police investigation

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மதியழகனை வழிமறித்தனர். உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க மதியழகன் வேகமாக ஓட தொடங்கினார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சுத்து போட்டு சரமாரியாக வெட்டினர். இதில், மதியழகன் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.

panchayat leader husband murder in cuddalore... police investigation

பட்டப்பகலில் காலை நேரத்தில் நடுரோட்டில் கொலை செய்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios