உத்தரப்பிரதேச மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சியின் போது தன்னை அவமானப்படுத்தியதற்காக கோரக்பூரைச் சேர்ந்தவர் இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சியின் தன்னை 2 பேர் அவமானப்படுத்தியதாக கூறி அவர்களை துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழன்று நடந்த இந்த சம்பவம் குறித்து கஜ்னி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உபியில் பெல்காட் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் சவுகான். இவர், தனது உறவினருடன் சென்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் கொஞ்சம் கூடுதல் உடல் எடை கொண்டவர். அந்த விருந்து நிகச்சியில் மஞ்சாரியாவைச் சேர்ந்த அனில் சவுகான் மற்றும் சுபம் சவுகான் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் அர்ஜூன் சவுகானின் உடல் எடை குறித்து கேலி செய்யும் விதமாக மோட்டு (கொழுப்பு) என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அர்ஜூன் சவுகான் தனது நண்பர் ஆசிப் கான் உதவியுடன் காரில் புறப்பட்டுச் சென்ற அவர்கள் இருவரையும் பைக்கில் 20 கிமீ தூரம் வரையில் துரத்திச் சென்று காரை வழிமறித்து இருவரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) ஜிதேந்திர குமார் கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த அவர்கள் இருவரும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் முதலுதவி கொடுக்கபட்ட நிலையில் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர். இச்சம்பவம் தொடர்பாக சுபம் சவுகானின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய அர்ஜூன் சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.


