மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை என சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே பேசியிருப்பது எப்படியும் ஆட்சி அமைத்து விடலாம் என பா.ஜ.க.வுக்கு சிறு நம்பிக்கை கொடுத்துள்ளதாக தகவல்.
மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை என சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே பேசியிருப்பது எப்படியும் ஆட்சி அமைத்து விடலாம் என பா.ஜ.க.வுக்கு சிறு நம்பிக்கை கொடுத்துள்ளதாக தகவல்.மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற பா.ஜ.க.- சிவ சேனா கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என சிவ சேனா தெரிவித்தது. ஆனால் அதில் பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை.

முதல்வர் பதவியை தவிர வேறு எதுவும் வேண்டும் என்றாலும் கேளுங்க என பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் சிவ சேனா தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று பா.ஜ.க. தலைவர்கள் கவர்னரை சந்தித்து பேசினர். முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறுதான் கோரிக்கை விடுக்கதான் செல்வதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக கவர்னரிடம் அவர்கள் பேசினர்.

