Asianet News TamilAsianet News Tamil

ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா! உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை: மகாராஷ்டிர சபாநாயகர்

சபாநாயகரின் இந்த முடிவின் மூலம் சிவசேனாவின் ஷிண்டே அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவி இழப்பு அபாயத்திலிருந்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் இது உத்தரவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Maharashtra Speaker Says Uddhav Thackeray Had No Power To Remove Eknath Shinde sgb
Author
First Published Jan 10, 2024, 6:22 PM IST

1999ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்பு சட்டப் பதிப்பை மேற்கோள் காட்டி, ஏக்னாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் உத்தரவ் தாக்கரேவுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியுள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவின் மூலம் சிவசேனாவின் ஷிண்டே அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவி இழப்பு அபாயத்திலிருந்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் இது உத்தரவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், எக்னாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா கட்சி என்றும் மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பல எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

பாலிவுட் விழாக்களில் செருப்பு போட்டுச் சென்றால் தப்பா... உருவக் கேலி குறித்து விஜய் சேதுபதி வேதனை

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகரின் தீர்ப்பு, ஷிண்டே அணிக்கு ஆதரவாகத்தான் வரும் என்று கூறி உத்தரவ் தாக்கரே அணி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ஜூன் 2022 இல், எக்னாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் முரண்டபட்டு, பாஜகவின் கூட்டணியில் இணைந்தனர். இதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணி உடைந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios