மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி முதலில் வழங்கிய சின்னங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக 3 சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே அணி வழங்கியது.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி முதலில் வழங்கிய சின்னங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக 3 சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே அணி வழங்கியது.
ஷிண்டே அணி வழங்கிய 3 புதிய சின்னங்களில், அரச மரம்,வாள், மற்றும் சூரியன் ஆகியவை உள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், திடீரென சிவசேனா கட்சியில் உள்ள 40 எம்எல்ஏக்கள், 18 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவாக வந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
கவனமாக இருங்கள்! காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது: பாஜகவினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

ஏக்நாத் ஷிண்டே, பாஜக உதவியுடன் ஆட்சி அமைத்து முதல்வராகினார். இருவரும் தனித்தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் டிஒய் சந்திரசூட்:யுயு லலித் பரிந்துரை
இப்போது சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒருபிரிவாகவும் செயல்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 3ம் தேதி அந்தேரி கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
இதில் சிவசேனா கட்சியின் பெயரையும், வில் அம்பு சின்னத்தை இருவரும் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதையடுத்து, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இருவரும் பயன்படுத்தக்கூடாது எனக் கூறி முடக்கியது.
இதையடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி, புதிய சின்னம், கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. உத்தவ் தாக்கரே அணிக்கு “தீப்பந்தம்” சின்னமும் மற்றும் “சிவசேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே” என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஆனால், திரிசூலம், உதய சூரியன், கடாயுதம் ஆகிய சின்னங்கள் உத்தவ் தாக்ரே அணி கேட்ட நிலையில் அவை மறுக்கப்பட்டன. திரிசூலம், கடாயுதம் ஆகியவை மதரீதியான அடைாயளத்தை குறிப்பவை எனக் கூரி தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
உதய சூரியன் சின்னம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் சின்னம் என்பதால் அதையும் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
உதயசூரியன் சின்னம் கிடையாது.. சிவசேனா கட்சிக்கு 'தீபச் சுடர்' சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்’
ஷிண்டே அணியும் உதய சூரியன் சின்னத்தைக் கேட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. புதிதாக 3 சின்னங்களை தேர்ந்தெடுத்து வருமாறு ஷிண்டே அணியிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து அரசமரம், சூரியன், வாள் ஆகிய 3 சின்னங்களை ஷிண்டே அணி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
