‘உதயசூரியன் சின்னம் கிடையாது.. சிவசேனா கட்சிக்கு 'தீபச் சுடர்' சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்’
சிவசேனா கட்சிக்கு தீபச் சுடர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இடையேயான மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.
கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றின் இரு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு ஷிண்டே தரப்பிற்கு இருப்பதால், அவர்கள் மீது தாக்கரேவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. பாஜக உடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதல்வரானது மட்டுமின்றி, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் கட்சி அலுவலகம் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி போர்க்கொடி தூக்கினார்.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இரு தரப்பும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இந்தச் சூழலில் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. சிவசேனா கட்சி சார்பில் திரிசூலம் சின்னத்தை முதல் விருப்பமாகவும் உதய சூரியன் சின்னத்தை 2-வது விருப்பமாகவும் தேர்தல் ஆணையத்தில் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவசேனா கட்சிக்கு தீபச் சுடர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதேபோல உத்தவ் தாக்கரே அணிக்கு உத்தவ் பாலசாகேப் தாக்கரே என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக