ஆன்லைன் சூதாட்டம்... ரூ.5 கோடி சம்பாதித்து, ரூ.58 கோடியை இழந்த நபர்! ஏமாற்றியவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்!
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி இறங்கிய மகாராஷ்டிர மாநில தொழிலதிபர் 58 கோடி ரூபாயை பறிகொடுத்திருக்கிறார்.
நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.58 கோடியை இழந்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நபரை அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் நான்கு கிலோ தங்க பிஸ்கட்டுகள் மற்றும் ரூ.14 கோடி பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்படுபவர் சோந்து நவ்ரதன் ஜெயின் என்ற அனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாக்பூரிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள கோண்டியா நகரில் இருக்கும் அவரது இல்லத்தை போலீஸார் சோதனையிட்டனர். போலீசார் வருவதை அறிந்து அவர் தப்பி ஓடிவிட்டார். அவர் துபாய்க்கு தப்பிச் சென்றிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
"பணத்தை இழந்த தொழிலதிபரிடம் ஜெயின் ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி நம்ப வைத்துள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய அவர், இறுதியில் ஜெயின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, ஹவாலா வியாபாரி மூலம் ரூ.8 லட்சத்தைக் கொடுத்துள்ளார்" என்று நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறினார்.
போதையில் ரகளை செய்தவரை பிடித்து ஷூவால் மண்டையிலேயே அடிக்கும் போலீஸ்! வைரலாகும் கொடூரக் காட்சி!
ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக என்று கூறி வாட்ஸ்அப்பில் ஜெயின் தொழிலதிபருக்கு ஒரு லிங்க்கை அனுப்பியுள்ளார். இதனை அடுத்து தனது கணக்கில் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதைக் கண்ட தொழிலதிபர் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த அவர், ரூ.58 கோடியை இழந்தார். அதே நேரத்தில் அவர் ரூ.5 கோடியைச் சம்பாதித்துள்ளார் எனவும் அமிதேஷ் குமார் கூறுகிறார்.
சந்தேகம் எழுந்தபோது இழந்த பணத்தைத் திரும்பக் கேட்டதாகவும், ஆனால் ஜெயின் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தொழிலதிபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
"தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோண்டியாவில் உள்ள ஜெயின் வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில் ரூ.14 கோடி ரொக்கம் மற்றும் நான்கு கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணிசமான அளவு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன" எனவும் அமிதேஷ் சொல்கிறார்.
கைப்பற்றப்பட்ட பணம் இன்னும் எண்ணப்பட்டு வருவதால் இறுதி எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பைக்கில் சுய இன்பம் செய்துவிட்டு பெண்ணுக்கு 'லவ் யூ' மெசேஜ் அனுப்பிய ராபிடோ டிரைவர்