மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பாஜக திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இதையும் படிங்க;-  சிறுமியை அணு அணுவாக அனுபவித்து பலாத்காரம் செய்து வீடியோ... நிர்வாண படத்தை ஆபாச தளத்திற்கு அனுப்ப திட்டமிட்டது அம்பலம்..!

எக்காரணம் கொண்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர். பாஜகவை பொறுத்தவரை தங்களால் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் கூட சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக உள்ளது. இதுபோல முதல்வர் பதவியை விட்டுகொடுக்கவில்லை என்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று சிவசேனாவும் உறுதியாக உள்ளது. 

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் சிறுபான்மை அரசமைக்க பாஜக தலைமையும், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் விரும்பவில்லை. இன்னொருபுறம், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்கவும் இந்த ஆட்சிக்கு காங்கிரசை வெளியில் இருந்து ஆதரவளிக்கச் செய்யவும் சிவசேனா தொடர்ந்து முயற்சித்து வந்ததது. ஆனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சிகளாகவே செயல்படும் என்று சரத் பவார் நேற்று முன்தினம் அறிவித்ததன் மூலம் சிவசேனாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

இந்நிலையில்தான் நடப்பு சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் காலாவதியாகிறது. அதனால், இன்றைக்குள் எந்தக் கட்சியோ அல்லது எந்தக் கூட்டணியோ ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோராவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதையும் படிங்க;- 2 நாட்களில் மு.க.ஸ்டாலின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்... உ.பி.க்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மாஃபா பாண்டியராஜன்..!.

இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநரை தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார். இதனையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ்;- கடந்த 5 ஆண்டுகள் சேவை புரிய வாய்ப்பு அளித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது ராஜினாமாவை ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஊழலற்ற நேர்மையற்ற ஆட்சியை வழங்கியுள்ளேன் என்றார். மகாராஷ்டிரா முதல்வராக சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். தாங்கள் தொடங்கிய திட்டங்களில் 75 சதவீத திட்டங்களை நிறைவு பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.