உலகப் புகழ்பெற்ற மேடம் துஸாட்ஸ் மியூசியம்…டெல்லியில் திறப்பு
 

மேடம் துஸாட்ஸ் மியூசியம் 1835 ஆம் ஆண்டு Marie Tussaud என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்டது. இந்த மியூசியத்தில் உலகின் முக்கிய தலைவர்கள், ஹாலிவுட் உள்ளிட்ட திரைத்துரையினரின் மெழுகு சிலைகள் தத்ரூபமாக  உருவாக்கி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மேடம் துஸாட்ஸ் மியூசியம் உலகம் முழுவதும் 22 கிளைகளை திறந்துள்ளது. தற்போது அந்நிறுவனம் தனது 23 ஆவது கிளையை இந்திய தலைநகர் டெல்லியில் தொடங்கவுள்ளது.

வரும் ஜூன் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள  திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஹாலிவுட் பாப் நட்சத்திரம் லேடி காகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மியூசியம் திறக்கப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மேடம் துஸாட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மார்செல் க்ளூஸ் , மேடம் துஸாட்ஸ் வெறும் பொழுதுபோக்கை மட்டும் மையமாகக்கொண்டு இயங்கவில்லை என்றும் வாழ்வின் பல்வேறு துறை மக்களையும் இந்த மியூசியம் பிரதிபலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.. 

இந்தி திரை நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாரூக்கான், ஹிருத்திக்ரோஷன், சல்மான் கான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் மியூசியத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.