ஒரு மாதத்துக்கும் மேலாகிடுச்சு, ‘என் மகள்களை அபகரிச்சுண்டார்! என்று நித்யானந்தாவை நோக்கி ஜனார்த்தன சர்மா சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்த துவங்கி.  அப்போது நித்திக்கு எதிராக கிளம்பிய அதிர்வலை இதோ இன்று வரை கொஞ்சம் கூட சூடு குறையாமல் செம்ம டிரெண்டிங்கில் போய்க் கொண்டே இருக்கிறது.நித்திக்கு எதிராக ஜனாவின் குற்றச்சாட்டு ‘ஏதோ ஆசிரமத்தின் உள் விவகாரம்’ என்றுதான் துவக்கத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் கிணறு தோண்ட துவங்கையில்  வேதாளம் வெளிப்பட்ட கதையாக, இந்த விவகாரத்தை டீல் பண்ண துவங்கிய பின் தான் நித்தியின் ‘கைலாஸா நாடு’ எனும் தனித்தீவு விவகாரங்களெல்லாம் வெளிப்பட துவங்கின. நாட்டை விட்டே எஸ்கேப் ஆன நித்தியானந்தாவை பழைய பாலியல் வழக்குகள், புதிய ‘சிறுமிகள் கடத்தல்’ வழக்குகள் என அத்தனையிலும் ஆஜர் படுத்திட வேண்டி, இழுத்து வர சொல்லியிருக்கிறது ஆணையம். இது போதாதென்று, மேட்டூரை சேர்ந்த முருகானந்தம் எனும் நபர் கடந்த சில வருடங்களாக நித்தியின் ஆசிரமத்தினுள் இருக்கிறார். அவரது பெயரை நித்ய பிரனாணந்தா! என  மாற்றியிருக்கிறார் நித்தி. 

சமீபத்தில் இவரை ஆஸ்ரமத்தில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்! என்று ஜனார்த்தன சர்மா ஒரு தகவலை தட்டிவிட, கொதித்துப் போன முருகானந்தம் குடும்பமோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஆக நித்திக்கு எதிராக மிக கடுமையான சூழல்கள் இறுகி, இறுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மாஜி சினிமா நடிகையும், நித்யானந்தாவின் ஆஸ்தான சீடரும், மா நித்தியானந்தமயி!யுமான ரஞ்சிதா தற்போது இந்தியாவுக்கு திரும்பி, நித்தியின் ஆஸிரமங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை காப்பாற்றும் செயலில் இறங்கியிருக்கிறார்! ஒரு வேளை நித்தி கைதாகி, சில காலம் உள்ளே செல்ல வேண்டிய நிலை வந்தால் அப்போது இந்த சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடவோ, அபகரிக்கப்பட்டு விடவோ கூடாது. மேலும் நித்தியை வெளியில் எடுக்க மிகப்பெரிய அளவில் பணத்தேவை தேவைப்படும் என்பதாலேயே ரஞ்சிதா இந்த வேலையை துவக்கியிருக்கிறார், சொல்லப்போனால் நித்தி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது இடத்தை இப்போது பிடித்திருப்பது ரஞ்சிதா தான்! என்று பரபரப்பாக பேசுகின்றனர் பிடதி ஆசிரமத்தில். 

அதாவது நித்யானந்தாவின் பெண் அவதாரமாகவே ரஞ்சிதா மாறியிருக்கிறார்! என்கிறார்கள். ரஞ்சிதாவுக்கு அவ்வளவு பவர் நித்தியிடம் இருக்கிறதா? என்று கேட்டால்....”நித்தியின் வட்டாரத்தில் ஆல் இன் ஆல் ஆக இருப்பது ரஞ்சிதாவே! லெலின் கருப்பன் வெளியிட்ட ‘நித்தி, ரஞ்சிதா சர்ச்சை சல்லாப வீடியோ’ விவகாரங்களுக்கு பின், மிக முழுமையான அளவில் ஆஸிரமத்தினுள் ஐக்கியமாகிவிட்டார் ரஞ்சிதா. படிப்படியாக வளர்ந்தவர், கடந்த சில காலமாக முழுமையாக நித்யானந்தாவை ஆக்கிரமித்திருக்கிறார். ரஞ்சிதா ஒரு வார்த்தை சொன்னால் போதும் அப்படியே அடங்கிடுவார் நித்தி. எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும், எந்த பிரச்னையை எப்படி டீல் பண்ண வேண்டும்? என்று நித்திக்கு ஐடியா கொடுப்பதே ரஞ்சிதா தான்! அவர் ஒரு பார்வை பார்த்து, கண் சிமிட்டினாலும் கூட போதும், நித்யானந்தா அடங்கிடுவார்! ரஞ்சிதாவுக்கு அப்படி என்ன அதிகாரம் அந்த ஆஸ்ரமங்களில் தெரியுமா?....நித்யானந்தா தன்னை தன் சீடர்களின் அப்பா! என்பார். ரஞ்சிதா தான் ‘மா’! அதாவது அம்மா. இதுக்கு மேல் என்ன சொல்லணும்?” என்று கேட்கிறார்கள்.