சொகுசு கார்கள், வைரங்கள் : ரூ. 13,000-சம்பளம் பெற்ற நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது எப்படி?
ரூ.13,000 சம்பாதிக்கும் கணினி ஆபரேட்டர், காதலிக்காக ரூ.21 கோடி மோசடி செய்து ஆடம்பர கார்கள், பிளாட், நகைகள் வாங்கியுள்ளார். போலி மின்னஞ்சல் மூலம் வங்கிக் கணக்கை அணுகி மோசடி செய்துள்ளார்.
மாதம் ரூ.13,000 மட்டுமே சம்பாதிக்கும் 23 வயது கணினி ஆபரேட்டர், தனது காதலிக்கு ஆடம்பர கார்கள், 4-பிஹெச்கே பிளாட் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட ஆடம்பர வாழ்க்கைக்கு நிதியளிப்பதற்காக ரூ.21 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு விளையாட்டு வளாகத்தில் ஒப்பந்த ஊழியர் ஹர்ஷல் குமார் க்ஷிர்சாகர், அதன் வங்கிக் கணக்கை அணுக போலி மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினார். அவர் விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றி, 5 மாதங்களில் 13 வெவ்வேறு கணக்குகளில் ரூ.21.6 கோடியை செலுத்த, இணைய வங்கிச் சேவையை செயல்படுத்தினார்.
திருடப்பட்ட நிதியில் ரூ.1.2 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார், ரூ.1.3 கோடி எஸ்யூவி, ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக், சத்ரபதி சம்பாஜிநகர் விமான நிலையம் அருகே உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை அவரது காதலிக்காக வாங்கியுள்ளனர். ஹர்ஷல் அவருக்காக ஒரு ஜோடி வைரம் பதித்த கண்ணாடியையும் வாங்கியதாக கூறப்படுகிறது.
இ-பான் கார்டைப் பதிவிறக்கம் செய்யும்படி மின்னஞ்சல் வந்துள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்!
ஹர்ஷல் தலைமறைவாக உள்ளார். இருப்பினும், அவருக்கு உதவியதாக அவரது சகா யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பி.கே.ஜீவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் கடம் கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் தப்பியோடியுள்ளார். விசாரணையில் அவர் பிஎம்டபிள்யூ கார் மற்றும் பைக் வாங்கியது, சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, மேலும் சில தங்க ஆபரணங்களை ஆர்டர் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியை எங்கள் குழுவினர் தேடி வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
RBI-ன் போலி வாய்ஸ்மெயில் மோசடி: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் நிதி கண்டுபிடித்ஹ்டு புகார் அளித்ததையடுத்து இந்த மோசடி வெளிப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை தொடர்வதால் இந்த திட்டத்தில் மற்றவர்கள் உடந்தையாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.