Lover sent a suicide vidio to girlfriend
காதலியை பிரிந்த சோகத்தில் மன உலைச்சல் அடைந்த காதலன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வதை காதலிக்கு வீடியோ கால் மூலம் நேரலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகே உல்ஹாஸ்நகரைச் சேர்ந்தவர் ஹனி அஷ்வனி (26). இவர் கடந்த மே 21-ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து அஷ்வனியின் தந்தை ஹில்லைன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை ஜூன் 18-ஆம் தேதி அளித்துள்ளார்.
“அஷ்வனும், ஒரு பெண்ணும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்து பிரிந்தும் விட்டனர்.
இந்த காதலியை பிரிந்ததால் மின உளைச்சலுக்கு ஆளான அஷ்வனி மே 21-ஆம் தேதி இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனையடுத்து வீடு திரும்பிய அஷ்வனி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்” என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரை முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்து காவலாளர்கள் விசாரித்தனர்.
இந்த நிலையில் அஷ்வன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ கிடைத்ததையடுத்து அதனை காவலாளர்களிடம் அவரது தந்தை ஒப்படைத்தார். அந்த வீடியோவில், அஷ்வனி தற்கொலைக்கு முன் மிகுந்த மன உளைச்சலுடன் காதலிக்கு வீடியோ கால் பேசியதும், தன்னுடைய தற்கொலையை காதலிக்கு நேரலை செய்ததும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அஷ்வனியின் காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் போலீசார் அஸ்வனியின் காதலியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
