திருப்பதி அருகே பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்திற்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் திருப்பத மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்தது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஏர்பேடு கிராமம். அந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் 30 க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றிவந்த லாரி ஒன்று பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து அருகில் உள்ள டீ கடைக்குள் நுழைந்து மோதி நின்றது.

இந்த கோர விபத்தில் பேருந்தக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் உள்ளிட்ட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோர் திருப்பதி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்  டயர்  வழுக்கி லாரி கூட்டத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. மேலும் மழை காரணமாக மீட்புப் பணிகளும் தாமதமானதாக தெரிகிறது,

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.