Loksabha Election Result 2024 : தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 என்ற கணக்கில் திமுக மற்றும் அதன் தோழமை காட்சிகள் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னணி வகித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர். 

குறிப்பாக தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படும் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், அதன் தோழமைக் கட்சியில் இருக்கும் பாமகவின் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரும் தோல்வியை தழுவி வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 என்ற இடத்தை பெற்று திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Kamalhaasan : "சிந்தாமல் சிதறாமல் நாம் பெற்ற வெற்றி.. தமிழ் வெல்க".. வாழ்த்து மடல் வெளியிட்ட மநீம தலைவர் கமல்!

இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி மக்களவையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக சாடினார். 

"இந்த நாட்டில் இரண்டு விதமான பார்வைகள் உள்ளது, அதில் ஒன்று மாநிலங்களில் ஒற்றுமை அதாவது தமிழகத்தில் இருக்கும் எனது சகோதரர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்கிறேன். அவர்கள் தங்களுக்கு வேண்டியனவற்றை கூறுகின்றார்கள். அதேநேரம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள், நானும் எனக்கு என்ன வேண்டும் என்பதை கூறுகிறேன். 

Scroll to load tweet…

இதற்கு பெயர்தான் கூட்டாட்சி இதற்குப் பெயர்தான் ஒரு ராஜ்யம் ஆகையால் உங்களால் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. தமிழர்களை உங்களால் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று ராகுல் காந்தி அன்றைய தனது உரையில் பேசினார். இப்பொழுது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியினரும் அந்த வீடியோவை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.

என்.டி.ஏ - இந்தியா கூட்டணிக்கு இடையே டஃப் போட்டி.. இதுக்கு ஷாருக்கான் தான் காரணமா?