இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு நடிகர் ஷாருக்கான் காரணம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக கூட்டணி கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது

இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு முற்றிலும் மாறாக வெளியாகி வருகின்றன. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு நடிகர் ஷாருக்கான் காரணம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ராமர் கோயில் பாஜகவுக்கு உதவியதா? உ.பியில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்?

ஷாருக்கான் எந்தக் கட்சியுடனும் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ஜவான் படத்தின் கிளைமேக்ஸில் சரியான நபருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அவர் பேசிய வசனம் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

"பயம், பணம், ஜாதி, மதம், சமூகம் ஆகியவற்றைக் கண்டு வாக்களிப்பதற்குப் பதிலாக, உங்கள் வாக்கு கேட்க வந்தவர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்று கேளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்களின் சிகிச்சைக்கு அவர்கள் எப்படி உதவுவார்கள்? எனவே சரியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜவான் படத்தில் வசனம் இடம்பெற்றிருக்கும். 

ஜவான் படத்தின் ஷாருக்கான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த ஒரு பயனர் “ லோக்சபா தேர்தல் 2024 க்கு முன்னர் ஜவான் இந்த சிறந்த படத்திற்கு அனைத்து இந்திய அரசியல்வாதிகளும் ஷாருக்கானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொருவர், "ஷாருக்கானின் ஜவான் படத்தின் பங்களிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. அரசாங்கத்தின் காலடியில் விழாத கிங் கானுக்கு சல்யூட், ஜவான் படம் பலரின் மனதைத் திறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்

Scroll to load tweet…

இதே போல் மற்றொரு பயனர் "வாழ்த்துக்கள், கிங் ஷாருக்கான், ஜவானில் இருந்து உங்கள் தேர்தல் மோனோலாக், பெரிய நேரம் உழைத்துள்ளார். இந்திய மக்கள் மதம் அல்லது ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை, ஆனால் செயல்கள் மற்றும் நம்பிக்கையின்படி வாக்களித்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்

Scroll to load tweet…

செப்டம்பர் 2023 இல் வெளியான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்திப் படமாக மாறியது. எனவே, மக்கள் மத்தியில் அதன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

Lok Sabha Election 2024: சதத்தை நெருங்கும் காங்கிரஸ்! 10 ஆண்டுகளுக்குப் பின் புதிய எழுச்சி உருவானது எப்படி?