Asianet News TamilAsianet News Tamil

Modi : "இது மக்களின் வெற்றி".. தோழமை கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி - வெற்றி உரையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

PM Modi : மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ள மூன்றாவது வெற்றி, 'மக்களின் வெற்றி' என, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனது உரையில் கூறினார்.

Loksabha election results 2024 it is the victory of the people says pm modi in victory speech ans
Author
First Published Jun 4, 2024, 11:03 PM IST | Last Updated Jun 4, 2024, 11:03 PM IST

இந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வகுத்த இலக்குககளைவிட, குறைவாகவே உள்ளது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த NDA, இன்று இரவு 9.30 மணி நிலவரப்படி, 292 என்ற வெற்றி எண்ணிக்கையில் உள்ளது. பெரும்பான்மையான 272ஐ விட வெறும் 20 இடங்கள் மட்டுமே இது அதிகம். NDAவின் எதிர் கூட்டணியான காங்கிரஸ் 2019ல் பெற்ற 52 இடங்களிலிருந்து இப்பொது அதிகரித்து 100 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கிறது.

பிஜேபிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்துள்ள என்பது, அது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தங்களுடைய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதும் பொருள். 2019ல் 303 இடங்களை வென்ற பிறகு, பிஜேபி கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவை பதவிகளை வழங்கியது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வருத்தம் அளித்தது.
இந்நிலையில் இன்று, பிரதமர் மோடி நிதிஷ் குமாருக்கு மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசதின் சந்திரபாபு நாயுடுவுக்கும் நன்றி தெரிவித்தார். 

தமிழர்களை உங்களால் எப்போதும் ஆள முடியாது.. ட்ரெண்டாகும் ராகுலின் பழைய வீடியோ - அன்று அவர் பேசியது என்ன?

“சட்டசபைத் தேர்தலுக்குச் சென்ற நான்கு மாநில மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். நிதீஷ் பாபுவின் கீழ், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நன்றாக இருந்தது,” என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், பா.ஜ.க.வினர் நேர்மறைகளை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 

நமக்கு கிடைத்த இந்த மூன்றாவது வெற்றி, ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து இதுவரை இல்லாத சாதனையாகும் என்று தனது கட்சியினருக்கு நினைவூட்டினார் பிரதமர் மோடி. இந்தியா தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது, அதற்கு எப்போதும் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறினார். 

நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? ராகுல்காந்தி சொன்ன பதில்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios