AP Exit Poll Survey 2024 : மீண்டும் ஆட்சி அமைப்பாரா ஜெகன் மோகன்? அல்லது சந்திரபாபு நாயுடு வெல்வாரா?
AP Exit Poll Survey 2024 : ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2024க்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களின் சாத்தியமான முடிவுகளைக் கணக்கிடும்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சி), தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி ஆந்திரப் பிரதேசத்தில், 25 இடங்களில் நடைபெற்ற வாக்குபதிவில் NDA கூட்டணி 19 முதல் 22 இடங்களைப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. என்று News18 கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது.
அதே போல பாஜக 23 முதல் 25 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதே நேரத்தில் தேர்தலுக்கு முந்தைய அதன் கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ் 2-3 இடங்களைப் பெறலாம் என்றும், ஆளும் காங்கிரஸ் 3-5 இடங்களை பெறலாம் என்றும் Indian Express தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!