பெண் குழந்தைகளுக்கான எல்.ஐ.சி. கன்யதான் பாலிசி: என்னென்ன அம்சங்கள், நன்மைகள்?
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து எல்.ஐ.சி-யால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம்தான் கன்யதான் பாலிசி

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில், பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்வி உள்ளிட்ட அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து எல்.ஐ.சி-யால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள திட்டம்தான் கன்யதான் பாலிசி 2023.
கன்யதான் பாலிசி 2023 பாலிசியை யார் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இந்த பாலிசியை எடுப்பதற்கு பெண் குழந்தைக்கு குறைந்தபட்சம் 1 வயது நிரம்பி இருக்க வேண்டும். தந்தைக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.121 சேமிப்பதன் மூலம், இந்தத் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் மாதத்திற்கு ரூ.3600 பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசியின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள். ஆனால், 22 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. 25 ஆண்டுகள் முதிர்வு காலம் முடிந்ததும் பாலிசி எடுத்தவர்களுக்கு ரூ.27 லட்சம் கிடைக்கும்.
அதேசமயம், இந்த காப்பீட்டுத் திட்டமானது 13 முதல் 25 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திலும் கிடைக்கிறது. எந்தவொரு நபரும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை காப்பீடு செய்யலாம். இந்த பாலிசியானது பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்கான நிதியை சேமிக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING மணிப்பூர் பெண்கள் நிர்வாண வீடியோ... பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
பாலிசி விவரம்
** பாலிசிதாரரின் வயது - குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 50 வயது
** மகளின் வயது - குறைந்தபட்சம் 1 வயது
** காப்பீடு வரம்பு - குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம்; அதிகபட்ச மேல் வரம்பு இல்லை
** அதிகபட்ச முதிர்வு - வயது 65 ஆண்டுகள்
** பாலிசி காலம் - 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை
** பிரீமியம் செலுத்தும் காலம் - பாலிசி முதிர்வு காலத்தில் இருந்து 3 ஆண்டுகள் கழித்துக் கொள்ள வேண்டும்.
** பிரீமியம் எப்போது செலுத்த வேண்டும்? - மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர பிரீமியம் செலுத்தலாம்.
** யார் பாலிசியை எடுக்க முடியும் - அம்மா/அப்பா; குழந்தைகள் எடுக்க முடியாது
எல்ஐசி கன்யதான் பாலிசியின் அம்சங்கள்
** இந்த காப்பீட்டு விதிமுறைகளின் கீழ் ஒருவேளை ஒருவர் இறந்துவிட்டால், பிரீமியத்தை செலுத்துவதற்கு அவரது குடும்பத்தினர் பொறுப்பேற்க மாட்டார்கள். அதாவது அவரது குடும்பத்தினர் பிரீமியம் செலுத்த தேவையில்லை
** தனது மகளின் திருமணத்திற்கு யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் பங்களிக்கலாம்
** கூடுதலாக, எல்ஐசி நிறுவனம் அவரது குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சத்தை வழங்கும். மேலும் 25 ஆண்டுகளாக காப்பீடு முடிந்ததும், நாமினி ரூ. 27 லட்சம் தனித் தொகையாகப் பெறுவார்.
** பயனாளி விபத்தில் இறந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு எல்.ஐ.சி., ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும். இயற்கையான காரணங்களால் பயனாளி உயிரிழந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
** இந்த பாலிசிக்கு வரி விலக்கு உண்டு.
** தொடர்ந்து 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தி, பாலிசி ஆக்டிவாக இருக்கும்பட்சத்தில், பாலிசி மீது கடன் பெறும் வசதியும் உண்டு.