பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் லலித் மோடியையும், விஜய் மல்லையாவையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
லலித் மோடி, மல்லையா தொடர்பாக இந்திய அரசுக்கும், பிரிட்டன் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரிட்டன் பிரதமர் தெரஸா மே சமீபத்தில் இந்தியா வந்தபோது, இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது. இருவரையும் இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தனது தெரிவித்துள்ளார்.
