மகாராஷ்டிர மாநில புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்பற்றி வருபவர் மருத்துவர் கிருபலி நிகம். இவருக்கு வீடு திரும்பும் போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலே பலியானார் 
 
நேற்று மாலை சுமார் 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சவுடாகர் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். 

அப்போது வழியில் சிறுவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மருத்துவர் கிருபலி நிகம் கழுத்தில் மாஞ்சா கயிறு பட்டதால், கழுத்தை மிகவும்  ஆழமாக அறுத்து விட்டது. 

பின்னர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, மாஞ்சா கயிறு கொண்டு பட்டம் விட்டவர் யார் என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாஞ்சா கயிற்றை பயன்படுத்தி  ஒரு மருத்துவரையே உயிர் பலி வாங்கி விட்டது.